தருமபுர ஆதீனம் பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல் திறப்பு
தரங்கம்பாடி அருகே அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அக்னி கோடை வெயிலையொட்டி கோவில் வளாகத்தில் நீர் மோர் பந்தலை தருமபுரம் ஆதீனம் திறந்தார்.
Update: 2024-05-05 10:17 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்து மீண்டும் உயிர்பித்த தலமாகும் இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி வருடம் 365 நாட்களும் வயதான தம்பதிகள் திருமணங்கள் செய்து கொள்ளும் சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. தினந்தோறும் 100க்கும’; மேற்பட்ட திருமண வைபவங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளதால் வெளியூரிலிருந்து கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் நலன் கருதி இன்று கோவில் வளாகத்தில் நீர் மோர் பந்தலை தருமபுர ஆதினம் திறந்து வைத்தார். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நீர் மோர், தர்பூசணி ஆகியவற்றை வழங்கிய தருமபரம் ஆதீனம் தினந்தோறும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்க கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் 100,திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் திருமண தம்பதிகள் அவர்களது உறவினர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆயிரக்கணக் கானோர். கூடியதால் கோவில் வளாகத்தில் உள்ள ஹோமம் பூஜை நடைபெறும் தனி மண்டபம், நிரம்பிய வழிந்தது. முன்னதாக 60, ஆம் கல்யாணம் மற்றும் ஆயுள் ஹோமம் செய்த வயதான தம்பதியர், கோ-பூஜை, கஜ-பூஜை செய்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, மற்றும் அபிராமி அம்மனை வழிபட்டு சென்றனர்.