மேல்கதிர்பூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மேல்கதிர்பூர் கிராம ஊராட்சியில் விவசாயிகளின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை , பங்களிப்பு என சுமார் ஏழு லட்சத்தில் அரசு நெல் கொள்முதல் நிலைய கிடங்கு அமைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
விவசாயிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் , கடந்த பருவத்தில் முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை துவங்கி உள்ளது.
அவ்வகையில் கடந்த வாரம் முதல் அறுவடை செய்த நெல்களை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து கூடுதல் வருவாய் விவசாயிகள் பெற்று வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் அடுத்த மேல்கதிர்பூர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கீழ்க்கதிர்பூர், விப்பேடு, நரப்பாக்கம், குண்டு குளம் உள்ளிட்ட 8 கிராமங்களை உள்ளடக்கி அரசு நேரடி மேற்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 25,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதில் கிடைக்கப்பெற்ற ஊக்கத்தொகை மற்றும் கிராம விவசாயிகளின் பங்களிப்பு என ஒருங்கிணைக்கப்பட்டு சுமார் 7.5 லட்சம் மதிப்பீட்டின் கொள்முதல் செய்யும் நெல்களை பாதுகாக்கும் வகையில் குடோன் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா மற்றும் இந்த பருவத்திற்கான அரசு நேரடி மேல் கொள்முதல் நிலையம் திறப்பு என இரு விழாக்கள் கிராம ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம விவசாயிகள் கலந்து கொண்டு கொள்முதலை துவக்கி, அரசு விதிகளின்படி விவசாயிகள் இதனை பயன்படலாம் என இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடைக்கப்பெற்ற ஊக்கத் தொகையை எவ்வித செலவிற்கும் பயன்படுத்தாமல், விவசாயிகள் மற்றும் அரசுக்கு எந்த வித வீண் சேதம் இன்றி பாதுகாக்கும் வகையில் இது அமைக்கப்பட்டதாகவும் இதற்கு விவசாயிகள் பெறும் துணை புரிந்தவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.