பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திர அறை திறப்பு

Update: 2023-11-29 01:37 GMT

வாக்குப்பதிவு இயந்திர அறை திறப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 2016ம் ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறையாக தேர்தல் விதிகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி சென்னையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கீதா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை தொடர்ந்து அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைதளத்தில் அறை எண் 14ல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 2017ம் ஆண்டு அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாலும், உச்சநீதிமன்றத்தில் எதுவும் மேல் முறையீடு செய்யப்படாததாலும் நேற்று  அந்த பாதுகாப்பு கிடங்கினை திறக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் நேற்று  காலை 10 மணியளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான தங்கவேல் தலைமையில் அறைக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News