கால்நடை மருந்தக கட்டடங்கள் திறப்பு

கொண்டகரஅள்ளி ஊராட்சி, வத்தல்மலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலாபுரம் கால்நடை மருந்தக கட்டடங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

Update: 2024-01-04 05:36 GMT

கொண்டகரஅள்ளி ஊராட்சி, வத்தல்மலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலாபுரம் கால்நடை மருந்தக கட்டடங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். 

தர்மபுரி மாவட்டம், தர்மபுரி ஊராட்சி ஒன்றியம், கொண்டகரஅள்ளி ஊராட்சி, வத்தல்மலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியூர் (வத்தல்மலை) மற்றும் ஆலாபுரம் கால்நடை மருந்தக கட்டடங்களை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், கொண்டகரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சி.தங்கராஜ் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News