சேலம் ஜான்சன் பேட்டையில் நீர்-மோர் பந்தல் திறப்பு !

சேலம் ஜான்சன் நகர் காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு விழா ஜான்சன் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2024-04-27 12:17 GMT

நீர்-மோர் பந்தல் 

சேலம் ஜான்சன் நகர் காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு விழா ஜான்சன் நகரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நண்பர்கள் குழு செயலாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தமிழ்மணி, போத்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்-மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி, காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழு நிர்வாகிகள் அருணாசலம், பழனி, ஹரிகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News