ஜோத்தம்பட்டி ஊராட்சியில் மகளிர் சுய உதவி குழு கட்டடம் திறப்பு விழா
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடத்தை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.;
Update: 2024-02-09 14:08 GMT
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், ஜோத்தம்பட்டி ஊராட்சி, ஜோதி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மகளிர் சுய உதவி குழு கட்டடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் ஆகியோர் உள்ளனர்.