சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம் கோட்டத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை முதல் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.;

Update: 2024-04-19 02:07 GMT

பைல் படம் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பண்டிகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் சேலம் கோட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்கள் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Advertisement

அதாவது, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருவுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் முன்பதிவு மையம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு சேலம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News