மாமல்லபுரத்திற்கு குளிர்சாதன பேருந்து இயக்க நடவடிக்கை

திருவான்மியூரிலிருந்து மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களில் மட்டும், குளிர்சாதன பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Update: 2024-04-10 07:28 GMT
பைல் படம் 
மாமல்லபுரம் சிற்பங்களைக் காண, வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில், சென்னை பகுதி பயணியர் அதிக அளவில் குவிகின்றனர். சுற்றுலா பயணியர் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வர, திருவான்மியூரிலிருந்து மாநகர் சாதாரண பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தற்போது, வெயில் தகிக்கும் நிலையில், சாதாரண பேருந்தில் வர பயணியர் சிரமப்படுகின்றனர். அதனால், குளிர்சாதன பேருந்து இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், திருவான்மியூரிலிருந்து மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களில் மட்டும், குளிர்சாதன பேருந்து, 60 ரூபாய் கட்டணத்தில் இயக்க, மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:    

Similar News