ஒப்பாரி போராட்டம் : அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

ராஜகிரி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஒப்பாரி போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.

Update: 2024-07-02 07:14 GMT

அமைதி பேச்சுவார்த்தை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் மின்சாரம் குடிநீர் சாலை வசதி ஆகிய அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  ஒப்பாரி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இதுகுறித்து பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ராஜகிரி ஊராட்சியில் மணமேடு கீழத் தெருவில் மினி டேங்க் பழுதடைந்து உள்ளதை சீர்செய்து தரப்படும் எனவும் மணல்மேடு பகுதியில் கிராம சமுதாயக்கூடம் அரசு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மணல்மேடு கீழத்தெரு பகுதியில் சாலை வசதி முன்னுரிமை அடிப்படையில் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

மணல்மேடு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 15வது நிதிக்குழு மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி பெற்று கட்டி தரப்படும் எனவும் இப்பகுதியில் பழுதடைந்த தெரு விளக்குகளை சீரமைத்து கொடுப்பது எனவும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அமைதி பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதன் பேரில் சமூக முடிவு எடுக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது .

இக்கூட்டத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சிஅலுவலர் சுதா பாபநாசம் போலிஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மண்டல துணை வட்டாட்சியர் பிரபு வருவாய் சுந்தரேசன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தமிழன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், ஒன்றிய செயலாளர் பசுபதிவளவன் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் பாலை முதல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News