ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு - சிபிஎம் மனு

Update: 2023-12-13 06:16 GMT

மனு கொடுக்கும் போராட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மின்சார வாரியத்தை பாதுகாத்திட மனு கொடுக்கும் இயக்கம் வட்டார செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் யாசர் அராபத் முன்னிலை வகித்தார். இது ஒன்றிய மோடி அரசின் மோசடி திட்டம் என்பதை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.சேகரன் உரையாற்றினார்.

முன்னதாக,தமிழ்நாடு அரசு இந்த ஒன்றிய அரசின் மோசடி திட்டத்தை அமுல்படுத்தக் கூடாது. ஸ்மார்ட் மின் மீட்டர் என்கிற பெயரில் பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்கு அனுமதிக்கக்கூடாது. ஏழை எளிய மக்களின் விவசாயிகளின் இலவச மின்சாரத்தையும் பறிக்கக் கூடாது என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்ட முடிவில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி மக்களிடம் பெற்ற 500 மனுக்களை தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்ப உதவி மின் செயற் பொறியாளர் ஜெகன்னாதன்,உதவிப் பொறியாளர் பஞ்சமூர்த்தி ஆகியோரிடம் பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் பெரணமல்லூர் சேகரன் மற்றும் வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் வழங்கினர்.

பெரணமல்லூர் இடைக்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், முருகன், அறிவழகன் வந்தவாசி இடைக்குழு உறுப்பினர்கள் மோகன், அண்ணா மலை, ஆனந்தன், சேட்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வந்தவாசி வட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், கருப்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News