ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு - மனு அளிக்கும் போராட்டம் 

Update: 2023-12-13 03:45 GMT
மனு அளிக்கும் போராட்டம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில், ஒன்றிய அரசின் நிர்பந்தத்திற்காக, பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது.  விவசாயிகள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்தை பாதுகாத்திட வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகில், விவசாயிகள் சங்க தஞ்சை ஒன்றிய செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன் (தஞ்சாவூர்), சி.பாஸ்கர் (பூதலூர் தெற்கு), ஏ.நம்பிராஜன் (அம்மாபேட்டை), தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஞானமாணிக்கம், மாவட்டக் குழு உறுப்பினர் கே. முனியாண்டி, பூதலூர் தெற்கு விவசாயிகள் சங்கம் ஒன்றியச் செயலாளர் கே. தமிழரசன், பூதலூர் வடக்கு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவையாறு  திருவையாறு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ராம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எம்.கதிரவன், ஆர்.பிரதீப் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேதுபாவாசத்திரம்  சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை மின்வாரிய அலுவலகத்தில், மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, குருவிக்கரம்பை விவசாயிகள் சங்கத் தலைவர் கோ.ராமசாமி, தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, கட்டுமான சங்கம் ஜெயசீலன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தர்மசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News