ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் தங்களுக்கு வாக்கு எண்ணிக்கை முகவர் அடையாள அட்டை வழங்கவில்லை எனக் கூறி மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சரும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு அடையாள அட்டையை ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
அப்போது திடீரென கூட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்ட நிலையில் உள்ளே போலீசார் நுழைந்தனர். அதனை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மற்ற முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஓபிஎஸ் முன்னிலையில் கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.