சிவகங்கையில் வேட்பாளர்கள் செலவின கணக்குகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்
சிவகங்கையில் வேட்பாளர்கள் அன்றாட செலவின கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அன்றாட செலவினக் கணக்குகளை 05.04.2024, 10.04.2024 மற்றும் 16.04.2024 ஆகிய தேதிகளில் ஒத்திசைவு செய்திடுமாறு ஏற்கனவே தொடர்புடைய வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் முதற்கட்டமாக வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து 03.04.2024 வரை மேற்கண்ட அன்றாட தேர்தல் செலவின கணக்குகளை ஒத்திசைவு செய்ய ஏதுவாக தொடர்புடைய வேட்பாளர்கள் / வேட்பாளர்களின் முகவர்கள் வருகின்ற 05.04.2024 அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) முன்னிலையில், தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் அன்றாட செலவின கணக்கு பதிவேட்டினை தகுந்த முறையில் பூர்த்தி செய்து, தவறாது ஒத்திசைவு செய்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தெரிவித்துள்ளார்.