காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
தனிநபர்கள் அனைவரும் தங்களது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 நடைபெற உள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதி முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து படைக்கல உரிமதாரர்களும் அரசிடமிருந்து படைக்கல உரிமம் பெறப்பட்ட மற்றும் உரிமம் புதுப்பித்தலுக்கான நடைமுறை நிலுவையில் உள்ள அனைத்து படைக்கலன்களையும், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைத்திட வேண்டும்.
மேலும், தேர்தல் காலத்தில் படைக்கல உரிமம் வைத்துக்கொள்ள விதிவிலக்கு பெற்ற இனங்கள் நீங்கலாக மற்ற தனிநபர்கள் அனைவரும் தங்களது படைக்கலன்களை காவல்நிலையத்தில் ஒப்படைக்காமல் தங்களிடமே வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ மற்றும் அரசிடமிருந்து உரிமம் பெறாமல் எவரேனும் சட்டவிரோதமாக படைக்கலன்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டாலோ காவல்துறை மூலம் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தெரிவித்துள்ளார்.