விபத்தில் உயிர் இழந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

கன்னியாகுமரி பகுதயில் விபத்தில் மூளைச்சாவடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம். உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-22 08:55 GMT
விபத்தில் மூளைச்சாவடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்.
கன்னியாகுமரி சுவாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் பிரவீன் (26) பிளம்பர் வேலை செய்து வருகிறார்.  இவருக்கு பிரிய சோபா (25)என்ற மனைவியும் இரண்டரை மற்றும் 6 மாதமான மகள்களும் உள்ளனர்.  கடந்த 19ஆம் தேதி மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பிரவின் பைக்கில் கன்னியாகுமரி சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.  இவர் மூளை சிதைந்து  சுயநினைவிழந்தார். சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் மூளைச்சாவு அடைந்த நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டது.  எனவே பிரவீன் உடலுறுப்புகளை தானம் செய்ய சம்மதமா என்று உறவினர்களிடம் டாக்டர்கள்  கேட்டனர். அதன்படி உறுப்பினர்கள் தானம்  செய்ய சம்மதித்தனர்.       அதன்படி நேற்று காலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சூப்பரண்டு டாக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் டாக்டர் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் பிரவீன் இரு கண்கள், நுரையீரல், சிறுநீரகம் அனைத்தையும் தானமாக பெறப்பப்பட்டு,  அந்தந்த மருத்துவமனைகளுக்கு  காவல்துறை உதவியுடன் வேகமாக கொண்டு செல்லப்பட்டது.  உடல் உறுப்பை தானம் செய்ய சம்மதம் தெரிவித்த பிரவீன் குடும்பத்தினரை மருத்துவ குழுவினர் பாராட்டினர். அதேவேளையில் உடல் உறுப்புகளை தானம் செய்த பிரவீன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News