இயற்கை வேளாண் விழிப்புணர்வு கருத்தரங்கம்

குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது.

Update: 2024-04-18 10:02 GMT

இயற்கை விவசாயம்

குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள் எட்டு பேர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கீழபனையூரில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் 65 நாட்கள் தங்கி விவசாயிகளிடம் பயிர் சாகுபடி, நீர் மேலாண்மை, கால்நடை வளர்ப்பு, காய்கறி தோட்டம் அமைத்தல், வாழை, கரும்பு, மஞ்சள், கருணை, சர்க்கரைவள்ளி, கடலை சாகுபடி, மலர் சாகுபடி, விலை பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து அறிந்து கொள்ள உள்ளனர். மாணவிகளை உதவி இயக்குனர் பாண்டி வரவேற்றார்.

ஒத்தைப்புலி குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாயம் குறித்த கருத்தரங்கத்தை மாணவிகள் நடத்தினர். தலைமை ஆசிரியர் சைமன் தலைமை வகித்தார். வேளாண்மை பயிர் சாகுபடியில் தொழு உரம் தலையிலைகள் உயிர் உரங்கள், பஞ்சகவியம் தச காவியம், மீன் அமிலம், மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். இதனால் பயிர் செலுத்து வளர்வதுடன் அவற்றை உண்பதால் ஆரோக்கியமாக வாழலாம். அதேசமயம் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் அவற்றை உன் போர்க்கு ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து மாணவிகள் எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News