சோளிங்கரில் இயற்கை வேளாண்மை பயிற்சி!

இயற்கை வேளாண்மை குறித்து சமுதாய வள பயிற்றுனர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி சோளிங்கர் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2024-06-26 15:24 GMT

இயற்கை வேளாண்மை குறித்து சமுதாய வள பயிற்றுனர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி சோளிங்கர் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இயற்கை வேளாண்மை குறித்து சமுதாய வள பயிற்றுனர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி சோளிங்கர் வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். உதவித் திட்ட அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் அலமேலு வரவேற்றார்.இந்த பயிற்சி முகாமில் பயிற்றுனர் மற்றும் விஞ்ஞானி கோபிகிருஷ்ணன் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மை குறித்து சமுதாய வள பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளித்தார்.

பண்டைய கால விவசாய முறையை பயன்படுத்தி தற்போது இயற்கை உரங்களை கொண்டு நெல், கரும்பு, வேர்க்கடலை, காய்கறிகள் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்தல் மற்றும் இயற்கை முறையில் சாகுபடி செய்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.இந்த பயிற்சி முகாமில் 30-க்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். வட்டார ஒருங்கிணைப்பாளர், இயற்கை வேளாண்மை பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News