உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கோடை கால தண்ணீா் பந்தல்கள் அமைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 216 இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கோடை கால தண்ணீா் பந்தல்கள் அமைப்பட்டிருக்கின்றன.

Update: 2024-04-27 09:07 GMT

கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு 

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் கோடைகால தண்ணீா் பந்தல்கள் அமைத்து குடிநீா் வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி, திண்டுக்கல் நகரில் 11 இடங்களில் நீா், மோா் வழங்கப்படுகிறது.

பழனியில் 7 இடங்கள், கொடைக்கானல் நகராட்சியில் 4 இடங்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 3 இடங்கள், 23 பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 75 இடங்கள், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 115 இடங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 216 இடங்களில் கோடைகால தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீா் வழங்கப்படுகிறது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்கில் 2 லட்சம் ஓஆா்எஸ் கரைசல் பாக்கெட்டுகள், 1.05 லட்சம் ஐவி மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News