ஒட்டங்காடு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Update: 2024-05-03 16:19 GMT

தரங்கம்பாடி அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான ஒட்டங்காடு  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.   

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தேவஸ்தானம்  ஓட்டங்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மாராசுரனை அழித்து மக்களை காத்தருளிய அம்பிகை இத்தளத்தில் கத்தி, கபாலம், உடுக்கை, சூலம், ஜவாலாகேசத்துடன் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் அம்பிகையை மனம் உருக பிரார்த்திப்பவர்களின் குறைகளை அகற்றி சகல நன்மைகளையும் அருள்வார் எனக் கூறப்படுகிறது.  மேலும் இந்த அம்பிகை சுற்று வட்டாரத்தில் உள்ள 8 கிராம மக்களின் குலதெய்வமாக வழங்கி வருகிறார்.

இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் கடந்த 30ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகளும் தொடங்கின இன்று  ஆறாம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு முதலில் அருகில் உள்ள அய்யனார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகா மாரியம்மன் கோவில் விமான கலசங்களில் வேத மந்திரம் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கும்ப கலசத்தில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் தர்மபுரம் ஆதீன தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags:    

Similar News