ஒட்டப்பட்டியில் சாலையோரம் உள்ள குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டி பகுதியில் குப்பை கழிவுகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-19 09:54 GMT

தேங்கியுள்ள குப்பைகள் 

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட ஒட்டப்பட்டி தர்மபுரியில் வளர்ந்து வரும் நகரப் பகுதியில் ஒன்றாக இருந்து வருகிறது இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் சூழலில் பல்வேறு விதமான வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையின் ஓரம் பொதுமக்களின் தினசரி குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஏஜெட்டி ஊராட்சியின் கீழ் வரும் இந்த பகுதி சமீப காலமாக குப்பைக் கழிவுகளை தூர் வாராமல்,

இருப்பதனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் குப்பை கழிவுகள் மக்கி துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News