அயலக தமிழர் தின நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு

சென்னையில் நடைபெற்ற அயலாக தமிழர் தின நிகழ்ச்சி திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அகன்ற திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மக்களுடன் பார்வையிட்டார்.

Update: 2024-01-12 06:48 GMT

 பார்வையிட்ட ஆட்சியர்

அயலகத் தமிழர் தின நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.  இதனை பொதுமக்களோடு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜும் பார்வையிட்டார்.
Tags:    

Similar News