வெள்ளியணையில் எருது விடும் விழா
வெள்ளியணையில் நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்றனர்.
Update: 2024-01-17 02:03 GMT
ஆண்டுதோறும் தை மாதத்தில் எருதுவிடும் விழா வெள்ளியணையில் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, குமாரபாளையம், பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், தாங்கள் வளர்த்து வந்த எருதுகளை இப்பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து, பின்னர் ஊரைச் சுற்றி வலம் வருவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஊர் கொத்துக்காரர்களான குணசேகரன், அரங்கநாதன், தமிழ்ச்செல்வன், மற்றும் கிராமமக்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு எருது விடும் விழாவை சிறப்பித்தனர்.