பெருமாபட்டில் எருது விடும் விழா

பெருமாபட்டு கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த 65 ஆவது ஆண்டு எருதுவிடும் விழாவில் சீறிபாய்ந்தோடிய காளைகளை திராளான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

Update: 2024-01-28 05:38 GMT

எருது விடும் விழா 

திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு 65 ஆவது ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது இந்த விழாவில் வேலூர் ஆம்பூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி தர்மபுரி உள்ளிட்ட பகுதியிலிருந்து 350 க்கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கேற்று சீரி பாய்ந்து யோடின ஒவ்வொரு காளைகளும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு களம் இறங்கியது ஒவ்வொரு காளைகளும் ஒரு சுற்றுகள் மட்டுமே ஓட விடப்பட்டன அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்தோடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது முதல் பரிசு 1,11,111 இரண்டாவது பரிசு 77,777 மூன்றாவது பரிசு 55,555 பரிசுகள் வழங்கப்பட்டது இந்த விழாவில் 350 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடியது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News