கலவை அருகே எருதுகாட்டு விழா
கலவை அருகே உள்ள ஆரூரில் நடந்த எருது காட்டு விழாவை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள ஆரூர் கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் மற்றும் காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டும் எருதுகாட்டும் விழா நடைபெற்றது. இத் திருவிழாவானது தொன்று தொட்டு பாரம்பரியமாக ஊர் நன்மைக்காகவும், பொதுமக்கள் கால்நடைகள் நோய் நொடி இன்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் திருவிழா நடைபெற்றது.
இதில் தங்களது கால்நடைகளை ஓட்டி வந்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஸ்ரீ பொன்னியம்மனை மூன்று சுற்று சுற்றி தீபாராதனை காட்டு சாமி தரிசனம் செய்தனர்.. தொடர்ந்து எருதுகாட்டும் விழாவில் பங்கேற்ற காளை சீறிப் பாய்ந்தது அப்போது அதனை அடக்கும் வகையில் இளைஞர்கள் தங்களது திறமைகளை காட்டினர். இந்த நிகழ்ச்சியை காண மாம்பாக்கம், சொரையூர், சஞ்சிவிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததோடு எருது காட்டும் விழாவை பார்த்து மகிழ்ந்தனர்.