பிள்ளைபேரு அலங்காரத்தில் பேச்சியம்மன் அருள்பாலிப்பு
சிவகாசி மாசி பொங்கலின் 8ஆம் நாள் விழாவில் பேச்சியம்மன் பிள்ளை பேரு அளிக்கும் அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Update: 2024-03-09 07:20 GMT
சிவகாசியிலுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபேச்சியம்மன் கோவில் மாசி பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக, ஸ்ரீபேச்சியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து, 8ஆம் நாள் ஸ்ரீபேச்சியம்மன் பிள்ளை பேரு அளிக்கும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.மாசி பிரமோற்சவ திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் ஊர்வலமும், அதனை தொடர்ந்து,ஸ்ரீபேச்சியம்மன் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை,ஸ்ரீபேச்சியம்மன் கோவில் நிர்வாகிகளும், திருவிழா உபயதாரர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.