8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் களம்
8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் களம்
Update: 2024-06-01 07:45 GMT
சித்தாமூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயமே கிராம மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில், அதிக அளவில் நெல் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை உலர்த்த நெற்களம் இல்லாததால், பல ஆண்டுகளாக விவசாயிகள் தங்களது நெல்லை சாலையில் உலர்த்தி வந்தனர். ஆகையால், பொலம்பாக்கம் ஊராட்சியில் நெற்களம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 9.1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நெற்கதிர் அடிக்கும் களமும், செய்யூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நெல் உலர்த்தும் களமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.