நெல் கொள்முதல் நிலையம் தயார்
ஈரோட்டில் நெல் அறுவடையின் அடிப்படையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
அரசு விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் விளைவித்த நெல்லினை நேரடியாக அரசே கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஈரோடு மண்டலத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 2023-2024 பருவத்திற்கு கீழ்பவானி பாசன பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் முதற்கட்டமாக 06 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 02.01.2024 முதல் திறந்து செயல்பட அனுமதி வழங்கியுள்ளதன் அடிப்படையில் நசியனூர், நாதிபாளையம் , கூகலூர் , புதுவள்ளியம்பாளையம் , அளுக்குளி மற்றும் கலிங்கியம் ஆகிய 6 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் நெல் அறுவடையின் அடிப்படையில் மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லினை விற்பனை செய்ய கிராம நிர்வாக அலுவலரின் சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல்,வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன்நேரில் வந்து கைரேகை பதிவு செய்து கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் கன்கரா கேட்டுக்கொண்டுள்ளார்கள்.