அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வரைதல்

வெட்டுவெந்நி மீன் சந்தையில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

Update: 2024-03-13 18:00 GMT

பிளாஸ்டிக் பறிமுதல் 

கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் வணிகர் நிறுவனங்களில் பயன்படுத்தக் கூடாது எனவும் விற்பனை செய்யக்கூடாது எனவும் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கடை உரிமையாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு மேலும் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பறிமுதல் செய்து அபராதமும் விதித்தது. இந்த நிலையில் இன்று குழித்துறை நகராட்சி ஆணையாளர் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர் வழிகாட்டுதலின் படி வெட்டுவெந்நி மீன் சந்தை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் குழித்துறை நகராட்சி உட்பட்ட அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News