வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் பாலாய பூஜை
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவிலில் திருப்பணி பாலாய விழா நடைபெற்றது.
வெள்ளகோவிலில் வீரக்குமாரசாமி கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோவில்களில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் கடந்து விட்டது. இதை அடுத்து கோவிலை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.அதற்கான திருப்பணி வேலை செய்ய இந்து சமய அறநிலைத்துறை மூலம் அரசிடம் இருந்து அனுமதி பெறப்பட்டது. இதை அடுத்து பாலாலய பூஜைகள் நடைபெற்று வேலைகள் தொடங்கப்பட்டது.
செல்லாண்டிம்மன் கோவில் கருவறை பகுதியில் உள்ள மார்பில், கிரானைட், டைல்ஸ், சிமெண்ட் பூச்சிகள் அகற்றப்பட்டு மாற்றப்படுகின்றது. அனைத்து கல் மண்டப பகுதிகளும் புதுவிக்கப்படுகின்றது. மகா மண்டபம் மேல் தளம் பழுதுபார்ப்பு,மூலவர், விநாயகர், குறிஞ்சி விமானங்கள் முகப்பு சாலகாராம் பழுது நீக்கி வர்ணம் தீட்டுதல், மடப்பள்ளி பொருட்கள் வைப்பு அறை மற்றும் திருக்கோவில் வெளிப்பிரகார சிமெண்ட் சீட் கொட்டகை அகற்றி மங்களூர் ஓடு போட்டு கூரையாக அமைத்தல், சேதமடைந்த தீப தம்பம் புதிதாக மாற்றும் பணிகள் செய்யப்பட உள்ளது.
வீரக்குமாரசாமி கோவிலில் உற்சவர் உட்பட ஒன்பது சன்னதிகள் விமானங்கள் பழுதுபார்ப்பு, வெளிப்பிரகாரத்தில் உள்ள சுற்றுப் பிரகாரம் மண்டப அலங்கார வேலை, வெளிப்பிரகார மண்டப சிமெண்ட் சீட் மேற்கூரை அகற்றி ஓடு போடுதல் அதில் புதிதாக கல் மண்டபம் அமைத்து உலோக திருமேனிகள் பாதுகாப்பாரை கட்டுதல், கோவில் வெளிப்புற இருக்கும் அலுவலக கட்டிடம், அன்னதான மண்டபம், பொங்கல் மண்டபத்தினை முழுமையாக அகற்றி வேறு இடத்தில் கட்டுதல் என மொத்தம் இரண்டு கோவில்களிலும் 26 வேலைகள் செய்யப்படுகின்றது. பாலாலய விழாவில் கோவில் அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.