கும்பகோணம் அருகே ஶ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பால்குட ஊர்வலம்

கும்பகோணம் அருகே செருகுடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

Update: 2024-04-29 12:54 GMT

பால் குடம் எடுத்த பக்தர்கள்

கும்பகோணம் அருகே கல்லூர் ஊராட்சி, செருகுடி கிராமம், புதுத்தெருவில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீசெல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் 40 ஆண்டுகளாக சித்திரை திருவிழா தடைபட்டு இருந்து வந்த நிலையில் தற்போது ஊர் மக்களின் பெரும் முயற்சியில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பால்குடம், காவடி, அலகு காவடி, அக்னி கொப்பரை எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து செல்வமுத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பாலபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு வானவேடிக்கையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்பாள் ஊர்வலம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் கிராம நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள், இளைஞர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News