எதிர்கால மாணவ உலகம் போட்டி -பள்ளப்பட்டி பெண்கள் பள்ளி முதலிடம்
கரூர் மாவட்டத்தில் PEC நடத்திய எதிர்கால மாணவ உலகம் போட்டியில் பள்ளப்பட்டி பெண்கள் பள்ளி முதலிடத்தை பிடித்தது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டியில் ஹாஜி ஹபீப் திருமணக் கூடத்தில் PEC நடத்திய எதிர்கால மாணவ உலகம் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளப்பட்டி மற்றும் சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து 130 மாணவ- மாணவியர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று நடைபெற்ற போட்டியில், ஒருநிமிடபேச்சு, கருத்துக்களை எழுதுவது,ஓவியம் வரைதல், குழுவோடு கலந்து முடிவு எடுத்தல், ஆக்டிங் என்கிற நடிப்பு, மார்க்கெட்டிங் செய்யும் நுட்பங்கள் போன்ற போட்டிகளில் மாணாக்கர்களின் செயல்பாடுகள் எதிர்கால நம்பிக்கையை விதைப்பதாகவும், நுட்பம் நிறைந்ததாகவும், இருந்தது.
இதில் புள்ளிகளின் அடிப்படையில் சுழற்கோப்பையை உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் மேல் நிலைப்பள்ளி (கோஷா ஸ்கூல்) மாணவிகள் தட்டிச் சென்றனர். PEC பள்ளப்பட்டி எக்னாமிக் சேம்பர் கல்வி பிரிவு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் பொதுநல அமைப்பினரும் கலந்து சிறப்பித்தனர் நிகழ்வில் சென்னையைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் HR Trainer தமீம் மற்றும் Mitsubishi அஹமது ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.