ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு - ஆட்சியர் அறிவிப்பு
கடந்த மாதம் ரேஷன் கடைகளில் பாமாயில்- துவரம் பருப்பை பெறாதவர்கள் இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை மானிய கோரிக்கையின்போது உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பிற்கு ஏற்ப கடந்த ஜூன் மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதமான ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து மாதம் முழுவதும் பெற்று கொள்ளலாம், என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் முதன்மை செயலாளர், ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் மற்றும்துவரம் பருப்பு நகர்வு தாமதமானது. கடந்த மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை பெற்றுக்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் கடைகளில் இருப்பு பெறப்பட்ட வுடன் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாதம் முழுவதும் பெற்றுக்கொள்ளலாம், என்று மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்