ஊராட்சிமன்ற துணைத்தலைவருக்கு கொலை மிரட்டல்

கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தகாத வார்த்தையில் பேசிய கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-01 10:49 GMT
கிராம ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தகாத வார்த்தையில் பேசிய கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் முத்தலாபுரம் பகுதியைச் சார்ந்தவர் பாண்டிமுத்து இவர் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் கடந்த 26 ஆம் தேதி இரவு இவர் வீட்டில் இருந்த பொழுது இவர் வீட்டிற்கு அருகே வசிக்கும் குமார் என்பவர் அங்கு வந்து பாண்டிமுத்துவை பார்த்து தரக்குறைவாகவும் அருவருக்கத்தக்க வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது கொலை மிரட்டல் விடுத்த பாண்டி முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆமத்தூர் காவல் நிலையத்தில் பாண்டிமுத்து புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News