மின் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஊராட்சிகள்
மின் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஊராட்சிகள்;
By : King 24x7 Website
Update: 2024-01-03 08:41 GMT
மின் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கும் ஊராட்சிகள்
மாவட்டத்தில் 306 ஊராட்சிகள் உள்ளன. இங்கு ஊராட்சி அலுவலகம், சேவை மையக்கட்டடங்கள், ஆண்கள் பெண்கள் சுகாதார வளாகங்கள், தெரு விளக்குகள், குடிநீர் மின் மோட்டார்கள் உள்ளிட்டவற்றுக்கு மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. தமிழக அரசு ஊராட்சி வாரியாக மின்கட்டணம் செலுத்துவதற்காக மாதம் ரூ.60 ஆயிரம் வழங்குகிறது. இந்தத் தொகை மிகச்சிறிய ஊராட்சிகளுக்கு வேண்டுமானால் போதுமானதாக இருக்கலாம். பெரும்பாலான ஊராட்சிகளில் மின் கட்டணம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வருகிறது.தற்போதுள்ள நிதி நெருக்கடியில் ஊராட்சிகளில் மின் கட்டணத்தை செலுத்துவது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.