தீப்பிடித்து எரிந்த வாகனத்தால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் பாலு என்பவர் தனது நண்பருடன் ஆம்னிவேனில் சென்ற நிலையில் கரும்புகை எழுந்தமையால் வேனில் இருந்து கீழே இறங்கிய நிலையில் வாகனம் தீ பிடித்து எரிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-24 09:39 GMT
தீப்பிடித்து எரிந்த வாகனத்தால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனி கலிக்க நாயக்கன்பட்டி பிரிவு அருகே , பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாலு என்பவர் தனது நண்பருடன் ஆம்னிவேனில் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது வேனில் இருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதை அறிந்த பாலு உடனடியாக வேனை நிறுத்தினார் .தொடர்ந்து வேனில் இருந்தவர்கள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில் வாகனம் தீ பிடித்து எரிந்தது. இதனால் எந்த அசம்பாவித சம்பவம் நிகழவில்லை.விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.