சோழபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா
சோழபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-04-06 07:23 GMT
சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு முத்துமாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று முத்துமாரியம்மனுக்கு பால்குடம், அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்