அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு!
மோகனூர் காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீதுள்ள அருள்மிகு அசலதீபேஸ்வரர் சிவ ஆலயம் வடக்கிலிருந்து தெற்கே செல்லும் காவிரி கரை மீது அமைந்துள்ள இந்த ஸ்தலம் அசையா தீபம் மூலவர் முன் பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.
1000 ஆண்டு முன் பழமை சிவ ஆலயத்தில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இங்கு தனி சன்னதியில் உள்ள கால பைரவருக்கு பஞ்சாமிர்தம், தேன் ,பால், தயிர். இளநீர், கரும்புச்சாறு, திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், விபூதி மற்றும் கலச தீர்த்தம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக, அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பஞ்சதீப உபசரிப்பு ஆராதனைகளும் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.
பின் இங்குள்ள ஸ்ரீ சரபேஸ்வரருக்கு மஹா தீபம் காண்பிக்கப்பட்டன. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வெண் பூசணிக்காய் தீபம் ஏற்றினர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.