சாத்தூர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா

சாத்தூர் மாரியம்மன் காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா காப்பக் கட்டும் விழாவுடன் தொடங்கியது

Update: 2024-03-25 13:49 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மாரியம்மன் காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா காப்பக் கட்டும் விழாவுடன் தொடங்கியது.  விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வழிபாடு செய்யப்படும் மேலும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பு செய்பவர் 8ம் நாள் திருவிழாவில் சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள் விரதம் இருந்து பொங்கல் வைத்து பூக்குழி இறங்கி தீ மிதித்து அக்கினி சட்டி எடுத்து அம்மனை வழிபடுவர் இது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

இந்த பங்குனி பொங்கல் திருவிழாவில் முதல் நாளான இன்று கோவிலில் காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது அம்மனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அனைவரும் வரிசையில் நின்று கையில் காப்பு கட்டி தங்களது விரதத்தினை தொடங்கினர் இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தினமும் அம்மனுக்கு வழிபாடு செய்து மாலை வேளையில் வீதி உலா நடைபெறும்

Tags:    

Similar News