ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோவிலில் பங்குனி உத்திரம்
ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் மேல கோபுர வாசலில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற்றது.
ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடன் காவடிகள். இராமேஸ்வரம்.மார்ச். 25.ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு மேல கோபுர வாசலில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய முருகன் கோவிலில் அகில இந்திய யாத்திரப்பணியாளர்கள் சங்கம் சார்பில் 62 ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு காவடிகள் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தி வந்தனர். இதனையடுத்து உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் மேற்கு கோபுர வாசலில் அமைந்துள்ள முருக பெருமானுக்கு அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத்தினர் சார்பாக 62 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருநாள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பால்காவடி தேர்காவடி பறவை காவடி மயில் காவடி என ஏராளமான காவடிகள் வந்த வண்ணமாக இருந்தது.
இதில் காவடிகள் வெகு தூரமான பாம்பன் தங்கச்சிமடம் தனுஷ்கோடி புது ரோடு கரையூர் சேராங்கோட்டை ராமகிருஷ்ணபுரம் சம்பை மாங்காடு என பல்வேறு கிராமங்களில் இருந்து காவடிகள் கடும் வெயிலையும் பற்றி பொருட்படுத்தாமல் எடுத்து வந்தர். இதில் காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் வசதிக்காக 100 மீட்டர் தூரத்தில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. காவடிகள் எடுத்து வரும் பக்தர்கள் வசதிக்காக யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காவடிகளுக்கு இடையூறு இல்லாமல் எடுத்து செல்லவும் தரிசனம் செய்யவும் மேலவாசல் முருகன் கோவில் வழி வகுத்து கொடுத்தனர். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு ஆயுதப்படை காவலர்கள் கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக நகரின் முக்கிய பகுதியில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் இடையே இல்லாத வண்ணம் திட்டக்குடி சாலை வடக்குரத வீதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் அனைத்து மாற்று பாதையில் அனுப்பப்பட்டது.