மரகத தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

மதுராந்தகம் அருகே அருள்மிகு மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2024-03-23 17:00 GMT
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்கருணை நடுபழனி அருள்மிகு மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்,47- ஆம் ஆண்டு படிவிழா மற்றும் 58 -ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சுவாமி மரகதண்டாயுதபாணி திருத்தேரை பொதுமக்கள் இழுத்தபடி அரோகரா கோஷமிட்டு கனக மலையை சுற்றி வந்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News