பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள்

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருப்பூரில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. பாரதி நகரில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-03-24 13:31 GMT

பங்குனி உத்திர திருவிழா 

பங்குனி உத்திர திருவிழா இன்று தமிழக முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகரில் உள்ள ஏராளமான முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பாரதி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ சிங்காரவடிவேலர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பால் மற்றும் தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.

பன்னாரி அம்மன் விநாயகர் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலமானது  மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கோவிலை வந்தடைந்தது.  இதனை தொடர்ந்து பால் , பன்னீர் , சந்தனம் மற்றும் இளநீர் உள்ளிட்ட பிறகு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Tags:    

Similar News