பண்ணாரி வனப்பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித் திரியும் குட்டி யானை !

பண்ணாரி வனப்பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித் திரியும் குட்டி யானை பண்ணாரி வனப்பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை நலமுடன் உள்ளதாகவும் தொடர்ந்து கண்ணாணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2024-06-14 05:05 GMT

 யானை

பண்ணாரி வனப்பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித் திரியும் குட்டி யானை பண்ணாரி வனப்பகுதியில் தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை நலமுடன் உள்ளதாகவும் தொடர்ந்து கண்ணாணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்த நிலையில் சத்தி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் சத்தியில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் புதுக்குய்யனூர் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அந்த பகுதியிலேயே படுத்து கிடந்தது. அந்த யானை அருகே 3 வயது குட்டியானை தவித்துக் கொண்டிருந்தது.

வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தாய் யானை இறந்தது. தாயை பிரிந்த குட்டி யானையை யானைகள் கூட்டம் சேத்து கொள்ளாததால் பிரிந்து கடந்த இரண்டு மாதமாக பண்ணாரி சாலையில் மாலை நேரத்தில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தது. பண்ணாரி சோதனைச்சாவடி அருகே குட்டி யானை அவ்வப்போது வந்து சென்றது.

இதைக் கண்ட வன ஆர்வலர்கள் தாயைப் பிரிந்த குட்டி யானையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீட்டு, முதுமலை யானைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது தாய் யானை இறந்த பின் இரு மாதங்கள் ஆன நிலையில், குட்டி யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

தொடர் மழையால் வனப்பகுதியில் யானைக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைக்கிறது. இதன் காரணமாக குட்டி யானைக்கு தேவையான உணவு கிடைப்பதால் யானை நன்றாக உள்ளது. உடல்நலக்குறைவோ, சோர்வோ ஏற்படவில்லை. அது விரும்பும் போது யானைக்கூட்டத்துடன் சேர்ந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

Similar News