ஊக்கத்தொகை வழங்கிய பண்ருட்டி நகர்மன்ற தலைவர்
பண்ருட்டி நகர்மன்ற தலைவர் ஊக்கத்தொகை வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-25 10:18 GMT
சிலம்பம் வீரருக்கு ஊக்கத்தொகை வழங்கல்
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில் 5வது ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி கன்னியாகுமரி வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் இந்திய அணி சார்பில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 34 வீரர்கள் பங்கு பெறுகின்றனர். இதில் பண்ருட்டி நகரம் 26 வது வார்டு திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த வே. தினேஷ் கலந்து கொள்ள உள்ளார்.
அவருக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திமுக நகர செயலாளர் க. இராஜேந்திரன் ஊக்கத்தொகை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
உடன் நகர அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர மன்ற உறுப்பினர் சண்முகவள்ளி பழனி, இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பார்த்திபன், ராஜா, மற்றும் பிரபு ஆகியோர் உள்ளனர்.