பரமக்குடி : திமுக சார்பில் கோடைகால நீர், மோர் பந்தல் திறப்பு.
பரமக்குடியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கோடைகால நீர், மோர் பந்தலை எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார்.
Update: 2024-05-13 09:00 GMT
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பரமக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இதனை ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு நீர், மோர், சர்பத், தண்ணீர் பழம், இளநீர், நுங்கு ஆரஞ்சு பழம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.