பரமத்தி வேலூர் வெற்றிலை விவசாயிகள் சங்க பேரவை கூட்டம்.
பரமத்தி வேலூர் வெற்றிலை விவசாயிகள் சங்க 47ஆம் ஆண்டு பேரவை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்கத்தின் 47 ஆண்டு பேரவை கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க தலைவர் வையாபுரி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் நடோசன் வரவேற்றார். சங்கத்தின் பொருளாளர் ராசப்பர் வரவு,செலவு கணக்கிளை சமர்ப்பித்தார். சங்கத்தின் கெளரவ தலைவர் நடராஜன் சிறப்புரையாற்றினார். 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும், 50 பேர் கொண்ட பொதுக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- ராஜர, பொய்யேரி மற்றும் கொமரபாளையம் ஆகிய வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். மேற்கண்ட தூர்வாரப்பட்ட வாய்க்கால்களின் மேட்டில் ஆங்காங்கே மண்னை கொட்டி வைத்துள்ளனர். அந்த மண் திட்டுகளை வாய்க்கால் பாதையில் பரவி வண்டி, வாகனங்கள் செல்லும் வகையில் சீர் செய்ய வேண்டும். பொத்தனூரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் பொத்தனூர் பகுதிக்கு கொண்டு வர அரசு ஆவனம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.