பரமத்தி வேலூர் : வாக்கு சாவடிகளை மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணா ஆய்வு.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாமக்கல் தொகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசாரின் செயல்பாடுகள், பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பது, போலீசார் வாக்குச்சாவடிகளில் தயார் நிலையில் உள்ளது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ச.ராஜேஸ்கண்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2024-04-19 02:16 GMT

எஸ்பி ஆய்வு 

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான  டாக்டர் ச.உமா உத்திரவின்படி நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு ச.ராஜேஸ்கண்ணன் தலைமையில் நாமக்கல் தொகுதியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,250 போலீசாரும், ஜார்கண்ட், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த 1080 காவலர்களும், 140 முன்னாள் படை வீரர்களும், 250 ஊர்க்காவல் படையினரும், 28 வனத்துறையினர், 18 சீருடை பணியாளர்கள், 46 ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 18 மத்திய ஆயுத காவல் பாடையினர் உள்ளிட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாக்கு சாவடிகளில் உள்ள காவலர்களை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ச.ராஜேஸ்கண்ணன் பரமத்திவேலுார் பகுதியில் உள்ள  வாக்குச்சாவடிக்கு சென்று  போலீசாரின் செயல்பாடுகள், பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவைகள் குறித்து போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News