பகுதி நேர அங்காடி திறப்பு
நெய்வேலி அருகே நரிப்பத்தையில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.
நெய்வேலி அருகே நரிப்பத்தையில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள நெய்வேலி வடக்கு ஊராட்சி நரிப்பத்தை கிராமத்தில் பகுதி நேர அங்காடியை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், திருவோணம் தெற்கு ஒன்றியச் செயலாளர் சோம.கண்ணப்பன், ஒன்றியப் பெருந்தலைவர் செல்லம் சௌந்தர்ராஜன், நெய்வேலி வடக்கு ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கே.பாண்டியன், கூட்டுறவு சார்பதிவாளர் ஜி.தவ்லத்கான், ஒரத்தநாடு வட்ட வழங்கல் அலுவலர் ஜி.சிவகுமார், கூட்டுறவு சங்க செயலாளர் எல்.ராமச்சந்திரன், விற்பனையாளர் எஸ்.குழந்தைசாமி மற்றும் கிராமத்தினர், கட்சியினர் கலந்து கொண்டனர். நெய்வேலி வடக்கு ஊராட்சி நரிப்பத்தை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்ப அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்களை வாங்க சுமார் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டிய நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தற்போது பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.