40 டன் குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு விருந்து!

குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் திருவிழாவில் சேர்ந்த குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நகரமன்ற தலைவர் மட்டன் பிரியாணி அளித்து விருந்தளித்தார்.

Update: 2024-05-28 13:55 GMT

குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் திருவிழாவில் சேர்ந்த குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நகரமன்ற தலைவர் மட்டன் பிரியாணி அளித்து விருந்தளித்தார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கெங்கையம்மன் ஆலயத்தில் கடந்த 13ம் தேதி தேர் திருவிழாவும், 14ஆம் தேதி சிரசு திருவிழாவும்,16ஆம் தேதி புஷ்பபல்லுக்கும் நடைபெற்றது. குறிப்பாக 14ஆம் தேதி நடைபெற்ற கெங்கை அம்மன் சிரசு திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே சிரசு திருவிழாவில் சுமார் 40 டன் குப்பையை இரவு பகல் பாராமல் தூய்மை பணியில் ஈடுபட்டு அகற்றிய 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் என 300 பேருக்கு குடியாத்தம் நகராட்சி சார்பாக நகராட்சி வளாகத்தில் இன்று விருந்தளிக்கப்பட்டது .சுடச்சுட மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் உள்ளிட்டவை பரிமாறப்பட்டது.
Tags:    

Similar News