இஸ்லாமியர்களிடம், போட்டி போட்டு வாக்கு சேகரித்த கட்சியினர்

கெங்கவல்லி அருகே இலுப்புதோப்பு ஈகை மைதானத்தில் ரம்ஜான் தொழுகையை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம், திமுக, அதிமுகவினர் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Update: 2024-04-12 15:55 GMT

கெங்கவல்லி அருகே இலுப்புதோப்பு ஈகை மைதானத்தில் ரம்ஜான் தொழுகையை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம், திமுக, அதிமுகவினர் போட்டி போட்டுக் கொண்டு வாக்கு சேகரித்தனர்.

கெங்கவல்லி: கெங்கவல்லி அகுகே இலுப்புதோப்பு ஈகை மைதானத்தில் ரம்ஜான் பண்டிகையொட்டி, இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்களிடம் திமுக, அதிமுகவினர் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேக ரித்தனர் .

கள்ளக்குறிச்சி தொகுதிதிமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து முன் னாள் எம்எல்ஏ சின்னதுரை, ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக் மொய்தீன். கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன், கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ். விளையாட்டு மேம் பாட்டு துணை அமைப்பாளர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வா திகள் வாக்கு சேகரிந்தனர்.

அதேநேரம், அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து கெங்கவல்லி எம் எல்ஏ நல்லதம்பி. ஒன்றிய செயலாளர் கூடமலை ராஜா, கெங்கவல்லி பேரூர் செயலாளர் இளவரசு உள் ளிட்ட அதிமுகவினர் ஆத ரவு திரட்டினர். ஒரே நேரத் தில் தொழுகை முடிந்து இரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தங்களது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டியதால் அப்பகுதி யில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News