ரயிலில் இருந்து பயணி தவறி விழுந்து பலி - போலீசார் விசாரணை !
மானாமதுரை அருகே பயணி ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-20 04:34 GMT
பலி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி யூனியனுக்குட்பட்ட குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ராதாகிருஷ்ணன்(36). இவர் சென்னை பெருங்குளத்தூர் பகுதியில் ஜே.சி.பி., ஆப்ரேட்டராக பணி புரிந்து வருவதாக கூறப்படும் நிலையில் சொந்த ஊரான குறிச்சி கிராமத்திற்கு திருவிழாவிற்கு வந்து விட்டு சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் மீண்டும் சென்னைக்கு திரும்பும்போது ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் கீழப்பசலை பகுதியில் ரயிலில் இருந்து நிலை தடுமாறு கீழ விழுந்ததாக கூறப்படுகிறது. கீழே விழுந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த மானாமதுரை ரயில்வே காவல்துறையினர் உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்